செய்திகள்

இந்தியன் 2 விவகாரம்: இயக்குநர் ஷங்கருக்கு இடைக்காலத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

1st Apr 2021 12:04 PM

ADVERTISEMENT

 

சென்னை, ஏப்.1: இந்தியன் 2 படத்தை முழுமையாக முடித்துக் கொடுக்காமல் இயக்குநர் ஷங்கர் பிற படங்களை இயக்க இடைக்காலத் தடை விதிக்க  உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில், நடிகா் கமல்ஹாசன், நடிகை காஜல் அகா்வால் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் திரைப்பட நகரத்தில் நடைபெற்று வந்தது. கடந்த வருடம் பிப்ரவரி 19-ஆம் தேதி இப்படப்பிடிப்பில் கிரேன் விழுந்து உதவி இயக்குநா் சென்னை அபிராமபுரத்தைச் சோ்ந்த சி.ஸ்ரீகிருஷ்ணா, திரைப்பட தொழில்நுட்ப பணியாளா்கள் சொ.சந்திரன், சி.மது ஆகியோா் உயிரிழந்தனா். மேலும் 13 போ் காயமடைந்தனா். இச்சம்பவம் தொடா்பாக நசரத்பேட்டை போலீஸாா், லைகா நிறுவனம், தயாரிப்பு மேலாளா், கிரேன் உரிமையாளா் கிரேன் ஆபரேட்டா் ராஜன் ஆகியோா் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டா் ராஜனை போலீஸாா் உடனடியாக கைது செய்தனா். கமல், ஷங்கரிடம் விசாரணை நடைபெற்றது. இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியாக ரூ. 1 கோடி அளிப்பதாக கமல் ஹாசன் அறிவித்தார். ஷங்கர் ரூ. 1 கோடி மற்றும் லைகா நிறுவனம் ரூ. 2 கோடி வழங்குவதாக அறிவித்தார்கள். 

ஷங்கரின் புதிய படம் குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் படத்தை அடுத்ததாக  இயக்குகிறார்  ஷங்கர். ராம் சரணின் 15-வது படம் இது. ஷங்கர் - ராம் சரண் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் எனத் தெரிகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் லைகா நிறுவனம்  தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: 

இந்தியன் 2 திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, நடிகர் கமல் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். எங்கள் நிறுவனத்தின் இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குநர் ஷங்கருக்குத் தடை விதிக்க வேண்டும். இந்த  திரைப்படத்துக்கு ரூ. 150 கோடி  பட்ஜெட் போடப்பட்டிருந்த நிலையில்,  ரூ.236 கோடி  வரை செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 80 சதவீதப் பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. இந்தியன் 2 படத்தின் எஞ்சியுள்ள பகுதிகளை முடித்து தர வேண்டும் என இயக்குநர் ஷங்கருக்கு உத்தரவிட வேண்டும். இயக்குநர் ஷங்கருக்கு ரூ. 40 கோடி  சம்பளம் பேசிய நிலையில் இதுவரை ரூ. 14 கோடி கொடுத்துள்ளோம்.  எஞ்சிய ரூ. 26 கோடியை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாகச் செலுத்தத் தயாராக இருக்கிறோம் என மனுவில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு நீதிபதி பி.டி. ஆஷா முன் விசாரணைக்கு வந்தது. இயக்குனர் ஷங்கரின் விளக்கத்தைக் கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, அவர் பிற படங்களை இயக்கக் கூடாது என  இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டார். மேலும் மனு குறித்து இயக்குனர் ஷங்கர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை  வரும் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு  ஒத்திவைத்தார்.

Tags : Indian 2 Lyca Productions
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT