செய்திகள்

சினிமா எக்ஸ்பிரஸ் விருது விழாவில் ரஜினிகாந்த் (படங்கள்)

1st Apr 2021 04:55 PM

ADVERTISEMENT

 

திரைத் துறையில் தன்னிகரற்ற சேவையாற்றி வரும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தியத் திரை உலகினருக்குக் கிடைக்கும் கெளரவச் சின்னமாகவும், வாழ்நாள் அங்கீகாரமாகவும் இவ்விருது கருதப்படுகிறது.

2019-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியத் திரைத்துறையில் ரஜினியின் சாதனையைப் பாராட்டி இந்த விருது அவருக்கு வழங்கப்படவுள்ளது. இதையடுத்து ரஜினிக்குப் பிரதமரும் தமிழக முதல்வரும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

மத்திய, மாநில அரசுகளின் விருதுகளை வென்றுள்ள ரஜினிகாந்த், பலமுறை சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளையும் வென்றுள்ளார். நல்லவனுக்கு நல்லவன், ஸ்ரீ ராகவேந்திரர், தளபதி, அண்ணாமலை, பாட்ஷா, முத்து ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகருக்கான விருதுகளை வென்றுள்ளார். வள்ளி படத்துக்காக சிறந்த கதாசிரியருக்கான விருது அவருக்கு வழங்கப்பட்டது. சினிமா எக்ஸ்பிரஸ் விருது வழங்கும் விழாவில் ரஜினி கலந்துகொண்டபோது எடுத்த படங்கள்:

ADVERTISEMENT

1988 சினிமா​ எக்ஸ்பிரஸ் விருது

1992 சினிமா எக்ஸ்பிரஸ் விருது

1993 சினிமா எக்ஸ்பிரஸ் விருது

1996 சினிமா எக்ஸ்பிரஸ் விருது

Tags : Rajinikanth Rajinikanth Phalke
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT