செய்திகள்

ஐந்து கதைகள், ஐந்து பிரபல இயக்குநர்கள்: அமேசான் பிரைமில் வெளியாகும் புதிய தமிழ்ப் படம்!

DIN

கெளதம் மேனன், சுதா கொங்கரா, கார்த்திக் சுப்புராஜ், ராஜீவ் மேனன், சுஹாசினி மணி ரத்னம் என தமிழ் சினிமாவின் ஐந்து இயக்குநர்கள் ஒன்று சேர்ந்து ஒரு படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்துக்காக இயக்கியுள்ளார்கள். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

புத்தம் புதுக் காலை என்கிற ஐந்து கதைகள் கொண்ட இந்தப் படம் அக்டோபர் 16 அன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் நடைபெறும் இக்கதைகள் சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளன. 

இளமை இதோ இதோ என்கிற கதையை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். ஜெயராம், காளிதாஸ் ஜெயராம், ஊர்வசி, கல்யாணி பிரியதர்ஷன் போன்றோர் நடித்துள்ளார்கள்.

அவரும் நானும்/அவளும் நானும் கதையை கெளதம் மேனன் இயக்கியுள்ளார். எம்.எஸ். பாஸ்கர், ரிது வர்மா போன்றோர் நடித்துள்ளார்கள். 

காஃபி எனிஒன் கதையை சுஹாசினி மணி ரத்னம் இயக்கியுள்ளார். சுஹாசினி, அனு ஹாசன், ஷ்ருதி ஹாசன் போன்றோர் நடித்துள்ளார்கள். 

ரீயூனியன் கதையை ராஜீவ் மேனன் இயக்கியுள்ளார். ஆண்ட்ரியா, லீலா சாம்சன் போன்றோர் நடித்துள்ளார்கள். 

மிராகிள் கதையை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். பாபி சிம்ஹா, முத்து குமார் போன்றோர் நடித்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலக்சன் படத்தின் முதல் பாடல்!

ரத்னம் படத்தின் டிரெய்லர்

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

SCROLL FOR NEXT