செய்திகள்

மெரினா பட நடிகர் தற்கொலை

29th Sep 2020 05:12 PM

ADVERTISEMENT

 

மெரினா பட நடிகர் தென்னரசு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சிவகார்த்திகேயன், ஓவியா நடிப்பில் வெளியான மெரினா படத்தில் நடித்த தென்னரசு, மேலும் சில தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். சென்னை மைலாப்பூரில் வசித்து வந்தார்.

மூன்று வருடங்களுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தென்னரசுக்கு 2 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT