செய்திகள்

எஸ்.பி.பி.க்கு மணிமண்டபம்: சரணுக்கு பொதுமக்கள், ரசிகர்கள் நன்றி

27th Sep 2020 03:10 PM

ADVERTISEMENT

தாமரைப்பாக்கத்தில் மணி மண்டபம் அமைக்க உள்ளதற்கு எஸ்.பி.பி. சரணுக்கு அப்பகுதி மக்கள், ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். நேற்று அஞ்சலி செலுத்த முடியாதவர்கள் இன்று உடல் அடக்கம் செய்யப்பட்ட பகுதியில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் அடக்கம் செய்யப்பட்ட விவசாய பண்ணையில் அவருக்கு மணிமண்டபம் கட்டுவதாக ஏற்கனவே கிராம மக்களிடம் அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்திருந்த நிலையில், இன்று அவர் சொந்த செலவில் மணி மண்டபம் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேலும், அவரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாதவர்கள் பல்வேறு பகுதிகளில் வரும் அவரது ரசிகர்கள் பொதுமக்கள் வெளியில் இருந்தபடியே அவரின் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டு செல்கின்றனர்.

ADVERTISEMENT

விஜய் மக்கள் மன்றம் சார்பில் ரசிகர்கள் அவரின் படத்தை வரைந்து வந்து அனுமதி பெற்று உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கொண்டுவந்து காவல்துறையினரின் பாதுகாப்புடன் வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். குடும்பம் குடும்பமாக வருபவர்களுக்கு உள்ளே சென்று பார்வையிட அனுமதி மறுப்பதால் தொடர்ந்து தங்களுக்கு பார்வையிட அனுமதி அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்தனர்.

காவல்துறையினர் இங்கு வருபவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனவே யாரும் வரவேண்டாம் என எச்சரித்து அனுப்பி வைத்து வருகின்றனர்..

Tags : SPB
ADVERTISEMENT
ADVERTISEMENT