செய்திகள்

முன்கூட்டியே தனது சிலையை வடிவமைக்க ஆர்டர் கொடுத்த எஸ்.பி.பி. 

DIN

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஜூன் மாதமே தனது சிலையை வடிவமைக்க ஆர்டர் கொடுத்துள்ள செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், கொத்தப்பேட்டையைச் சேர்ந்த சிற்பி உடையார் ராஜ்குமார் என்பவரிடம், மறைந்த தனது தந்தை சாமமூர்த்தி- தாய் சகுந்தலா ஆகியோரின் சிலைகளை செய்வதற்கு எஸ்.பி.பி. ஆர்டர் கொடுத்துள்ளார். 

இதையடுத்து, தனது சிலை ஒன்றையும் செய்துகொடுக்கும்படி, எஸ்.பி.பி. கடந்த ஜூன் மாதம் சிற்பி உடையாரிடம் கேட்டுள்ளார். மேலும், ஊரடங்கு சமயம் என்பதால் நேரில் வரமுடியாது என்று கூறி தன்னுடைய புகைப்படங்களையே மின்னஞ்சல் மூலமாக அனுப்பியுள்ளார். 

இதனிடையே, எஸ்.பி.பி. கரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்ந்தார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியவுடன் சிலைகளை அவருக்கு காட்ட வேண்டும் என ராஜ்குமார் இருந்ததாக கூறப்படுகிறது. 

எஸ்.பி.பி. எதனையும் முன்னரே யோசித்து செயல்படக்கூடியவர் என்ற ஒரு பொதுவான கருத்து இருக்கும்பட்சத்தில், தனது சிலைக்கு தானே ஆர்டர் கொடுத்துள்ள இந்த செய்தியும் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது இறப்பை முன்கூட்டியே அறிந்திருப்பாரோ என பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் வசந்தோற்சவம் நிறைவு

கழுகுமலை அருகே பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி மக்கள் போராட்டம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

ஆம்பூா் அருகே காட்டு யானை மிதித்ததில் கால்நடை மேய்த்தவா் காயம்

SCROLL FOR NEXT