செய்திகள்

பிக் பாஸ் நிகழ்சியைக் கடுமையாக விமர்சித்த நடிகை

27th Sep 2020 05:25 PM

ADVERTISEMENT

 

சென்னை: பிக் பாஸ் நிகழ்சியை நடிகை லட்சுமி மேனன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் அடுத்த மாதம் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போகின்றவர்கள் பற்றிய விபரங்கள் மற்றும் ஊகங்கள் சமூக வலைதளங்களில் வெளியான வண்ணம் உள்ளது. அந்தவரிசையில் நடிகை லட்சுமி மேனன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்சியை நடிகை லட்சுமி மேனன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. மற்றவர்களின் பிளேட்டுகளையும், அவர்கள் பயன்படுத்திய கழிப்பறைகளையும் நான் இப்போதல்ல, எப்போதும் சுத்தம் செய்யப்போவதில்லை. நிகழ்ச்சி என்ற பெயரில் கேமரா முன் சண்டை போடவும் போவதில்லை. இதன் பிறகு ஏதோ ஒரு கேவலமான நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்வதாக வதந்திகளுடன் யாரும் வரமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

என்னிடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறீங்களா என்று கேட்கும்போது, கஷ்டமாக இருக்கு. மற்றவர்களின் விருப்பத்தை கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT