செய்திகள்

மருத்துவமனைக்கு எஸ்.பி.பி. குடும்பத்தினர் வருகை

DIN

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய குடும்பத்தினர் மருத்துவமனைக்கு இன்று வருகை தந்துள்ளார்கள். 

கரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த நிலையில் எஸ்.பி.பிக்கு வெண்டிலேட்டா், எக்மோ கருவிகளுடன் தொடா்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

சிலநாள்களுக்கு முன்பு, எஸ்.பி.பி.யின் உடல்நிலை பற்றி அவருடைய மகன் சரண், ட்விட்டரில் தெரிவித்ததாவது: எஸ்.பி.பி.யின் உடல் நிலை தொடர்ந்து சீரான முன்னேற்றத்தில் உள்ளது. இயன்முறை சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. வெண்டிலேட்டா், எக்மோ கருவிகளுடன் தொடா்ந்து சிகிச்சையளிக்கப்படுகிறது. திரவ உணவுகளை உட்கொள்கிறார். விரைவில் குணமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேற வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளார் என்றார்.

எனினும் எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று தகவல் அளித்தது. கடந்த 24 மணி நேரத்தில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாக அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து எஸ்.பி.பி. விரைவில் குணமாக வேண்டும் என்று பிரபலங்களும் ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய குடும்பத்தினர் மருத்துவமனைக்கு இன்று வருகை தந்துள்ளார்கள். எஸ்.பி.பி. மனைவி சாவித்திரி, மகன் சரண், மகள் பல்லவி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்துள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT