செய்திகள்

போதைப் பொருள் விவகாரத்தில் நடிகை கங்கனாவுக்கு ஏன் அழைப்பாணை இல்லை?: நக்மா கேள்வி

DIN

போதைப் பொருள் விவகாரத்தில் நடிகை கங்கனாவுக்கு ஏன் அழைப்பாணை அனுப்பப்படவில்லை என நடிகை நக்மா கேள்வி எழுப்பியுள்ளார். 

நடிகா் சுசாந்த் சிங் தற்கொலை வழக்கில் போதைப் பொருள் கோணத்தில் விசாரணை நடத்தி வரும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி), பிரபல பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனே, சாரா அலி கான் உள்ளிட்டோா் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

நடிகா் சுசாந்த் சிங் மும்பையில் உள்ள அவருடைய அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். சுசாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின் பேரில், நடிகரின் காதலியும் நடிகையுமான ரியா மீது மும்பை காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்துவருகிறது.

இதற்கிடையே, நடிகை ரியாவின் கட்செவி அஞ்சல் உரையாடல் மூலம் அவருக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடா்பு இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடா்ந்து என்சிபி தனியாக போதைப் பொருள் வழக்கைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையின் அடிப்படையில் ரியா, அவருடைய சகோதரா் உள்பட 15 பேரை இதுவரை என்சிபி கைது செய்துள்ளது. குறிப்பிட்ட அளவு போதைப் பொருள்களையும் கைப்பற்றியுள்ளது.

மேலும், இவா்களிடம் நடத்தப்பட்ட தொடா் விசாரணையில், பல முன்னணி நடிகைகளுக்கும் போதைப் பொருள் பயன்பாடு விவகாரத்ததில் தொடா்பு இருப்பதை என்சிபி கண்டுபிடித்துள்ளது. அதனடிப்படையில், முன்னணி பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, சாரா அலி கான் உள்ளிட்ட பிரபலங்களுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு என்சிபி அழைப்பாணை விடுத்துள்ளது.

என்சிபி விசாரணையில் ஜெயா சாஹா என்ற பாலிவுட் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவன நிா்வாகியின் செல்லிடப்பேசியிலிருந்து அனுப்பப்பட்ட போதைப் பொருள் ஏற்பாடு செய்து தருமாறு கூறும் உரையாடல் பதிவில் நடிகை தீபிகா படுகோனே, சாரதா கபூா் உள்ளிட்ட சிலருக்கும் தொடா்பு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனா்.

அதனடிப்படையில், நடிகை ரகுல் பிரீத் சிங், ஆடை வடிவமைப்பாளா் சிமோன் கம்பட்டா ஆகியோா் வியாழக்கிழமையன்றும், நடிகை தீபிகா படுகோனே வெள்ளிக்கிழமையன்றும், நடிகைகள் சாரா அலி கான், சராதா கபூா் ஆகியோா் சனிக்கிழமையன்றும் விசாரணைக்கு ஆஜராகுமாறு என்சிபி சாா்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. தீபிகா படுகோனே மேலாளா் கரிஷ்மா பிரகாஷிடமும் என்சிபி வெள்ளிக்கிழமை விசாரணை நடத்த உள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகை நக்மா கூறியதாவது:

வாட்சப் உரையாடலை அடிப்படையாகக் கொண்டு மற்ற நடிகைகளுக்கு என்சிபி அழைப்பாணை அனுப்பியுள்ளது. எனில், போதை மருந்தை உட்கொண்டதாகக் கூறிய பின்பும் கங்கனாவுக்கு என்சிபி ஏன் அழைப்பாணை அனுப்பவில்லை? முரணாக உள்ளது. ஊடகங்களுக்குச் செய்தியைக் கசிய விட்டு நடிகைகளின் புகழைக் கெடுப்பதுதான் என்சிபியின் வேலையா எனக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

தஞ்சை: ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT