செய்திகள்

மாஸ்டர் படம் திரையரங்குகளில் தான் வெளியாகும்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

23rd Sep 2020 02:02 PM

ADVERTISEMENT

 

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை - அனிருத். மாஸ்டர் படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 30 அன்று வெளியாகவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சூர்யா சமீபத்தில் வெளியிட்டார். அடுத்ததாக விஜய் சேதுபதி நடித்துள்ள க/பெ. ரணசிங்கம் படமும் ஓடிடியில் அக்டோபர் 2 அன்று வெளியாகிறது.

இந்நிலையில் சூரரைப் போற்று ஓடிடியில் நேரடியாக வெளியாவதைத் தொடர்ந்து, விஜய் நடித்த மாஸ்டர் படமும் நேரடியாக ஓடிடியில் வெளிவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவலை லோகேஷ் கனகராஜ் மறுத்துள்ளார்.

கோவையில் விஜய் ரசிகர் மன்றம் சார்பாக நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மாஸ்டர் படம் ஓடிடியில் வெளியாவதற்கு வாய்ப்பு இல்லை. திரையரங்கில் தான் வெளியாகும். திரையரங்குகள் என்றைக்கும் திறக்கப்படுகிறதோ அதன்பிறகு மாஸ்டர் பட வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றார்.

Tags : master Lokesh Kanagaraj
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT