செய்திகள்

இயக்குநர் பாலா தயாரிக்கும் படம்: போஸ்டர் வெளியீடு!

23rd Sep 2020 12:11 PM

ADVERTISEMENT

 

2018-ல் வெளியான மலையாளப் படம் - ஜோசப். இப்படத்தின் தமிழ் ரீமேக்கைத் தயாரித்துள்ளார் இயக்குநர் பாலா.

ஜோஜு ஜார்ஜ், திலீஷ் போத்தன், மாளவிகா மேனன், அத்மியா ராஜன் நடிப்பில் எம். பத்மகுமார் இயக்கிய மலையாளப் படம் - ஜோசப். இந்தப் படத்தில் நடித்த ஜூஜு ஜார்ஜ், கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் சிறந்த நடிப்புக்கான சிறப்பு தேசிய விருதையும் பெற்றார்.

ஜோசப், தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இயக்குநர் பாலா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை மலையாளத்தில் இயக்கிய பத்மகுமாரே இயக்கியுள்ளார். தமிழில் கதாநாயகனாக ஆர்.கே. சுரேஷ் நடித்துள்ளார். இசை - ஜி.வி. பிரகாஷ்.

ADVERTISEMENT

தமிழில் விசித்திரன் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

Tags : Vichithiran
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT