செய்திகள்

அமேசான் பிரைம் தளத்தில் நேரடியாக வெளியாகும் அனுஷ்கா படம்: டிரெய்லர் வெளியீடு

21st Sep 2020 02:47 PM

ADVERTISEMENT

 

அனுஷ்கா நடித்துள்ள சைலன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள படம் - நிசப்தம். தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. ரெண்டு படத்துக்குப் பிறகு மாதவன் - அனுஷ்கா ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள். தெலுங்கில் நிசப்தம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், மலையாளத்தில் சைலன்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

2018-ல் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த வருடம் ஏப்ரல் 2 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா காரணமாக இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. 

ADVERTISEMENT

நிசப்தம் படத்தின் தயாரிப்பாளர் கோனா வெங்கட், சமீபத்தில் ரசிகர்களிடம் ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். நிசப்தம் படத்தைத் திரையரங்கில் பார்க்க ஜனவரி, பிப்ரவரி வரை காத்திருக்க வேண்டும் என்றால் படத்தை எங்குப் பார்க்க வேண்டும் என விருப்பப்படுவீர்கள் எனக் கேட்டார். இதுதொடர்பாக 56.5% ரசிகர்கள் படத்தை ஓடிடியில் பார்க்க விருப்பப்படுவதாகத் தெரிவித்தார்கள். அனைவரையும் திருப்திப்படுத்த முயல்கிறோம். உங்கள் பதில்கள் எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று பதில் அளித்தார் கோனா வெங்கட்.

இதையடுத்து சைலன்ஸ் படம் அக்டோபர் 2 அன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Tags : silence
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT