செய்திகள்

மிஷ்கின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட மணி ரத்னம், ஷங்கர் (படங்கள்)

21st Sep 2020 12:29 PM

ADVERTISEMENT

 

இயக்குநர் மிஷ்கின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மணி ரத்னம், ஷங்கர் ஆகிய பிரபல இயக்குநர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.

சைக்கோ படத்துக்கு அடுத்ததாக விஷால் நடிப்பில் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வந்த மிஷ்கின், விஷாலுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாக அப்படத்திலிருந்து விலகிவிட்டார். இதனால் துப்பறிவாளன் 2 படத்தை விஷாலே இயக்கி வருகிறார்.

அருண் விஜய்யுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ள மிஷ்கின் அதன்பிறகு சிம்பு நடிப்பில் ஒரு ஆக்‌ஷன் படத்தை இயக்கவுள்ளதாகவும் இந்தப் படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க யோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

ADVERTISEMENT

இந்நிலையில் தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடிய மிஷ்கின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசை - கார்த்திக் ராஜா.

மேலும் மிஷ்கின் பிறந்த நாளுக்கு பிரபல இயக்குநர்களான மணி ரத்னம், ஷங்கர், கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நேரில் வந்து வாழ்த்து கூறி, பிறந்த நாள் கொண்டாட்டத்திலும் பங்கேற்றுள்ளார்கள். மணி ரத்னம், ஷங்கர் முன்னிலையில் கேக் வெட்டினார் மிஷ்கின். இயக்குநர்கள் வெற்றி மாறன், சசி, லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், சசி, பாடகர் கார்த்திக் போன்றோரும் கலந்துகொண்டார்கள். இந்தக் கொண்டாட்டத்தின் புகைப்படங்களை மிஷ்கின் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT