செய்திகள்

முந்தானை முடிச்சு ரீமேக்: பாக்யராஜ், ஊர்வசி வேடங்களில் சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ்

19th Sep 2020 03:41 PM

ADVERTISEMENT

 

முந்தானை முடிச்சு ரீமேக்கில் பாக்யராஜ், ஊர்வசி வேடங்களில் சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளார்கள்.

ஏ.வி.எம். தயாரிப்பில் கே. பாக்யராஜ் இயக்கி நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் - முந்தானை முடிச்சு. 1983-ல் வெளியான இந்தப் படம் தமிழகமெங்கும் ஏராளமான திரையரங்குகளில் நூறு நாள்களைக் கடந்து ஓடி, வசூலில் சாதனை படைத்தது. பிறகு ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் ஆனது.

கே. பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் உருவான இந்தப் படத்துக்கு இசை - இளையராஜா.

ADVERTISEMENT

தற்போது முந்தானை முடிச்சு படம் ரீமேக் செய்யப்படுகிறது.

இந்தத் திரைப்படத்தையும் மீண்டும் கே. பாக்யராஜ்தான் இயக்குகிறார். சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். ஊர்வசி ரோலில் ஐஸ்வர்யா ராஜேஷ். ஜே.எஸ்.பி. சதீஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

படத்தைப் பற்றிய புதிய தகவல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பாக்யராஜின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகவுள்ள இப்படத்தில் பாக்யராஜ், ஊர்வசி வேடத்தில் சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் இயக்குநர், இசையமைப்பாளர் பற்றிய தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. 

Tags : SASIKUMAR Aishwarya Rajesh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT