செய்திகள்

நயன்தாராவுடன் இணைந்து பிறந்த நாளைக் கொண்டாடிய விக்னேஷ் சிவன்

18th Sep 2020 05:32 PM

ADVERTISEMENT

 

இயக்குர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாராவுடன் இணைந்து தனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார்.

நானும் ரெளடி தான் படத்தின் உருவாக்கத்தின் போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலர்கள் ஆனார்கள். இருவரும் ஒன்றாக இணைந்த புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது வெளியிடுவார் விக்னேஷ் சிவன். காதல் பற்றிய மறைமுகப் பதிவுகளும் அவ்வப்போது வெளிவரும். தன்னுடைய வருங்காலக் குழந்தைகளின் தாயான நயன்தாராவுக்கு வாழ்த்துகள் என சமீபத்தில் அன்னையர் தினத்துக்காக வாழ்த்துகளைத் தெரிவித்தார். கடந்த மாத இறுதியில் ஓணம் பண்டியைக் கொண்டாட நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தனி விமானத்தில் சென்னையிலிருந்து கொச்சின் சென்றார்கள். பிறகு கேரளாவிலிருந்து நேராக கோவா சென்று விடுமுறையைக் கழித்தார்கள். கோவாவில் எடுத்த நயன்தாராவின் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தார். 

இந்நிலையில் இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாராவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டகிராம் தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் தனக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.

ADVERTISEMENT

போடா போடி, நானும் ரெளடி தான், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களை இயக்கியுள்ள விக்னேஷ் சிவன், அடுத்ததாக, காத்துவாக்குல ரெண்டு காதல் என்கிற படத்தை இயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு காதலர் தினத்தன்று வெளியானது. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் இப்படத்துக்கு இசை - அனிருத். தயாரிப்பு - லலித் குமார்.

 

Tags : Vignesh Shivan Nayanthara
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT