செய்திகள்

பாலிவுட் நடிகைக்கு கரோனா பாதிப்பு

18th Sep 2020 04:37 PM

ADVERTISEMENT

 

பாலிவுட் நடிகை ராஜேஸ்வரி சச்தேவ் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

1991-ல் மராத்தி படத்தில் நடிகையாக அறிமுகமான ராஜேஸ்வரி, ஏராளமான ஹிந்தி மற்றும் மராத்தி படங்களில் நடித்துள்ளார். போர்க்களம் என்கிற தமிழ்ப் படத்திலும் நடித்துள்ளார். பல தொலைக்காட்சிக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். ஷயாம் பெனகலின் சர்தாரி பேகம் என்கிற படத்தில் நடித்ததற்காக 1996-ல் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார். 

இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பற்றி ஃபேஸ்புக்கில் ராஜேஸ்வரி கூறியதாவது:

ADVERTISEMENT

கரோனா வைரஸ் தொற்றால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். சில அறிகுறிகள் தோன்றிய பிறகு பரிசோதனை செய்துகொண்டேன். தற்போது எனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளேன். கடந்த சில நாள்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பாதுகாப்புக்காக பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.  

Tags : COVID positive Rajeshwari Sachdev
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT