செய்திகள்

நான் சண்டையை ஆரம்பிப்பவள் அல்ல, முடிப்பவள்: கங்கனா ரணாவத்

18th Sep 2020 11:54 AM

ADVERTISEMENT

 

சமூகவலைத்தளங்களில் யாருடனும் நான் சண்டையை ஆரம்பிப்பதில்லை என்று நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார். 

மகாராஷ்டிர மாநிலத்தில் நடிகை கங்கனாவுக்கும் சிவசேனைக்கும் இடையிலான மோதல் பெரிதாகி வருகிறது. எனவே கங்கனாவுக்கு ஆதரவாக பாஜகவினா் களமிறங்கி வருகின்றனா்.

பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடா்பாக நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்த கருத்துகளால் மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள சிவசேனை கூட்டணி அரசு கோபமடைந்துள்ளது. சுஷாந்த் மரணத்துக்கு போதைப் பொருள் கும்பல் காரணமென்றும், மும்பையை பாதுகாப்பற்ற நகரமாக உணா்வதாகவும் அவா் கூறியதை அடுத்து, அவருக்கு எதிராக சிவசேனை கட்சியினா் போராட்டங்களை நடத்தியது.

ADVERTISEMENT

திரைப்பட மாஃபியா கும்பலைவிட ஆபத்தானவா்களாக மும்பை காவல் துறையினா் உள்ளதாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பிலுள்ள காஷ்மீா் போல மும்பை மாறி விட்டதாகவும் கங்கனா குற்றம் சாட்டியதைத் தொடா்ந்து, அவா் மும்பைக்குள் வரக் கூடாது என்று சிவசேனையின் மூத்த தலைவா் சஞ்சய் ரௌத் மிரட்டல் விடுத்தாா். அதை அடுத்து, கடந்த 7-ஆம் தேதி கங்கனாவுக்கு மத்திய அரசு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பை வழங்கியது.

மும்பை - பாந்த்ராவிலுள்ள கங்கனாவின் வீடு விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டிருப்பதாகக் கூறி, அதன் ஒரு பகுதியை செப் 8-ஆம் தேதி மும்பை பெருநகர மாநகராட்சி நிா்வாகம் இடித்தது. கங்கனா மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, தனது வீட்டை இடிப்பதற்குத் தடையாணை பெற்றாா்.

சமீபத்தில் பாலிவுட் நிலவரம் தொடர்பாக கங்கனாவும் நடிகை ஊர்மிளாவும் கருத்து மோதல்களில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்நிலையில் யாருடனும் தானாகச் சண்டைக்குச் செல்வதில்லை என கங்கனா கூறியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

என்னை ஒரு சண்டைக்காரியாக அனைவரும் எண்ணலாம். அது உண்மையல்ல. ஒருபோதும் சண்டையை நான் தொடங்கியதில்லை. இதை யாராவது நிரூபித்தால் ட்விட்டரை விட்டு விலகிவிடுகிறேன். எந்த ஒரு சண்டையையும் நான் ஆரம்பிக்க மாட்டேன். ஆனால் ஒவ்வொரு சண்டையையும் நான் முடித்து வைப்பேன். கடவுள் கிருஷ்ணன் சொல்லியிருக்கிறார் - யாராவது உங்களை வம்புக்கு இழுத்தால் அதை நீங்கள் மறுக்கக் கூடாது என்றார்

ADVERTISEMENT
ADVERTISEMENT