செய்திகள்

ஜி.வி. பிரகாஷின் முதல் ஆங்கிலப் பாடலை வெளியிட்ட ஏ.ஆர். ரஹ்மான் & தனுஷ்

DIN

ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள ஆங்கிலப் பாடலைச் சமூகவலைத்தளங்களில் ஏ.ஆர். ரஹ்மானும் தனுஷும் வெளியிட்டுள்ளார்கள்.

வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் டார்லிங் படத்தின் மூலம் கதாநாயகனாகவும் திரையுலகில் அறிமுகமானார் ஜி.வி. பிரகாஷ். சூர்யா நடிப்பில் அடுத்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள சூரரைப் போற்று படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் கோல்ட் நைட்ஸ் என்கிற ஆங்கிலப் பாடல்கள் கொண்ட ஆல்பத்தை உருவாக்கி வருகிறார் ஜி.வி. பிரகாஷ். இந்த ஆல்பத்தின் முதல் பாடலான ஹை அண்ட் டிரை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஜூலியா கர்த்தாவுடன் ஜி.வி. பிரகாஷ் இணைந்து பாடியுள்ளார். 

இப்பாடலை சமூகவலைத்தளங்களில் ஏ.ஆர். ரஹ்மானும் தனுஷும் வெளியிட்டுள்ளார்கள். நடிகர் சூர்யா உள்ளிட்ட பலரும் இப்பாடலுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT