செய்திகள்

கமலின் 232- ஆவது படம் "எவனென்று நினைத்தாய்'

17th Sep 2020 04:02 AM

ADVERTISEMENT

 

சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள புது படத்துக்கு "எவனென்று நினைத்தாய்' என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் 232-ஆவது படமாக உருவாகவுள்ள இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்குகிறார். 

"இந்தியன் -2' படத்தை சட்டப் பேரவை தேர்தலுக்கு முன்பாக வெளியிட வேண்டும் என்பதுதான் கமல்ஹாசனின் திட்டமாக இருந்தது. ஆனால், இப்போது "இந்தியன் -2' படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதே தெரியாமல் இருப்பதால், தனது அடுத்தப் படம் குறித்த பேச்சுவார்த்தையில் இருந்தார். 
இதற்கான தேர்வில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருந்து வந்தார். முதலில் கமல் நடிப்பதாக இருந்தது. பின்னர் கமல் தயாரிப்பில் ரஜினி இப்படத்தில் நடிப்பதாகப் பேசப்பட்டது. ரஜினிக்கு சொல்லப்பட்ட கதையில், கமலுக்கு சிறு கதாபாத்திரம் என்றும் சொல்லப்பட்டது. 

ஆனால், இறுதியாக ரஜினி தரப்பில் இருந்து இந்தப் படத்துக்கு ஒப்புதல் வரவில்லை என்ற தகவல் வெளியானது. இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் கமல் நடிப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT