செய்திகள்

விஜய் பட இயக்குநர் காலமானார்!

17th Sep 2020 10:50 AM

ADVERTISEMENT

 

விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்தை இயக்கிய பாபு சிவன் காலமானார். அவருக்கு வயது 54.

விஜய் நடித்த குருவி படத்துக்கு வசனம் எழுதியதோடு பைரவா படக் கதை விவாதத்திலும் கலந்துகொண்ட பாபு சிவன், விஜய் நடிப்பில் வேட்டைக்காரன் என்கிற படத்தை இயக்கியுள்ளார். அப்படம் 2009-ல் வெளியானது. சன் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ராசாத்தி தொடரை இயக்கி வந்தார்.

இந்நிலையில் கடந்த ஞாயிறன்று பாபு சிவனின் மகள்கள் நீட் தேர்வு எழுதச் சென்றிருந்தார்கள். அவர்களுடன் பாபு சிவனின் மனைவியும் உடன் சென்றிருந்தார். மூவரும் வீடு திரும்பியபோது மயக்க நிலையில் பாபு சிவன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். உடனே அவரை முதலில் தாம்பரத்தில் உள்ள மருத்துவமனையிலும் பிறகு ஒரு தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்த்தார்கள். போதிய பண வசதி இல்லாததால் அரசு மருத்துமனைக்கு பாபு சிவனை மாற்றியுள்ளார்கள்.

ADVERTISEMENT

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பாபு சிவனுக்கு நுரையீரல், சிறுநீரகப் பிரச்னைகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் காலமாகியுள்ளார். 

பாபு சிவனின் மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். 

Tags : Vettaikaran Babu Shivan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT