செய்திகள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி வசுந்தரா தாஸ்?

17th Sep 2020 01:07 PM

ADVERTISEMENT

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகியும் நடிகையுமான வசுந்தரா தாஸ் கலந்துகொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த மூன்று ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் முதல் சீசனை நடிகர் ஆரவ்வும் 2-வது சீசனை நடிகை ரித்விகாவும் கடந்த வருடப் போட்டியை முகென் ராவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளதாக விஜய் டிவி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கமல் நடித்த இந்நிகழ்ச்சி தொடர்பான விளம்பரமும் வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் பாடகியும் நடிகையுமான வசுந்தரா தாஸ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வசுந்தரா தாஸ், பிக் பாஸ் தரப்பு என இரு தரப்பும் இதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Vasundhara Das Bigg Boss Tamil 4
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT