செய்திகள்

அக்‌ஷய் குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கிய ஹிந்திப் படம்: ஓடிடியில் நேரடியாக வெளியாகும் தேதி அறிவிப்பு

17th Sep 2020 04:08 PM

ADVERTISEMENT

 

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ள லக்‌ஷ்மி பாம் என்கிற ஹிந்திப் படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் திரையரங்குகள் இயங்காததால் படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகளில் படங்கள் வெளியாவது குறித்து தெளிவான நிலை இல்லாததால் நேரடியாக ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள்.

2011-ல் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா படம் லக்‌ஷ்மி பாம் என்கிற பெயரில் ஹிந்திப் படமாக உருவாகியுள்ளது. ராகவா லாரன்ஸ் - அக்‌ஷய் குமார் முதல்முறையாக இணைந்துள்ளார்கள். கதாநாயகியாக கியாரா அத்வானி நடித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்தப் படம் மே 22 அன்று வெளிவருவதாக இருந்தது. ஆனால் தற்போதைய சூழலில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகவுள்ளதாகக் கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. பாலிவுட்டில் அனைவரும் எதிர்பார்த்த ஒரு படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாவது திரையுலக வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் லக்‌ஷ்மி பாம் படம் நவம்பர் 9 அன்று முதல் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்புடன் படத்தின் டீசரும் வெளியாகியுள்ளது.

 

Tags : Akshay Kumar Laxmmi Bomb
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT