செய்திகள்

ஊரடங்கு வாழ்க்கையை விரும்புகிறேன்: பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா

16th Sep 2020 02:16 PM

ADVERTISEMENT

 

ஊரடங்குக் கால வாழ்க்கையை விரும்புவதாக பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா கூறியுள்ளார்.

ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

ஊரடங்குக் கால வாழ்க்கையை நான் விரும்புகிறேன். கடந்த 10 வருடங்களில் இதுபோன்ற ஓர் ஓய்வு எனக்குக் கிடைக்கவில்லை. எனக்கான நேரம் ஒதுக்க முடியவில்லை. வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும், எது முக்கியம், எது முக்கியமில்லை என்பதைப் பற்றி யோசிக்க நேரம் கிடைத்தது. இக்காலக்கட்டத்தை நான் விரும்புகிறேன்.

ADVERTISEMENT

எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என நான் கவலைப்படவில்லை. அது எப்படி இருக்கும் என்றும். படப்பிடிப்புக்கு மீண்டும் செல்வது கடினமானது என்று தெரியும். முழுக் கவச உடைகளுடன் அனைவரும் இருப்பதும் எதைத் தொட வேண்டும் தொடக்கூடாது போன்ற அறிவுறுத்தல்களும் வித்தியாசமானவையாக உள்ளன. ஒரு போட்டோஷூட்டில் கலந்துகொண்டேன். என்னைத் தவிர அனைவரும் முழுக் கவச உடைகளில் இருந்தார்கள். தலை முதல் கால் வரை மூடப்பட்டிருந்தது. கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவதும் வித்தியாசமாக உள்ளது என்றார். 

2010-ல் டபாங் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் சோனாக்‌ஷி சின்ஹா. தமிழில் ரஜினிக்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT