செய்திகள்

உலகின் தலைசிறந்த விஜய் ரசிகர் யார்?

16th Sep 2020 11:23 AM

ADVERTISEMENT

 

உலகின் தலைசிறந்த விஜய் ரசிகரைத் தேர்வு செய்வதற்கான இணையப் போட்டி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. 

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோவும் சினிமா சென்ட்ரல் யூடியூப் சேனலும் இணைந்து இந்த இணையப் போட்டியை நடத்துகின்றன.

விஜய் ரசிகர்களுக்காக நடத்தப்படும் இந்தப் போட்டியில் விஜய் நடித்த படங்கள், அவருடைய பேட்டி, மேடைப்பேச்சுகள், விருப்பங்கள் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். விஜய்யைப் பற்றி அனைத்தும் தெரிந்த, உலகின் தலைசிறந்த விஜய் ரசிகரைத் தேர்வு செய்வதற்காக இப்போட்டி நடத்தப்படுகிறது என்கிறார் சினிமா சென்ட்ரல் யூடியூப் சேனலை நடத்தி வரும் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன். 

ADVERTISEMENT

இன்று மாலை 6 மணிக்கு இந்நிகழ்ச்சி பற்றிய அறிமுகம் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.

செப்டம்பர் 19 முதல் அடுத்த 10 வாரங்களுக்கு ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு தினங்களில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை சினிமா சென்ட்ரல், வலைப்பேச்சு ஆகிய யூடியூப் சேனல்களில் இணையப் போட்டி நேரலையாக ஒளிபரப்பப்படும். இப்போட்டியில் காலிறுதி, அரையிறுதி, இறுதிச்சுற்று எல்லாம் உண்டு. 10 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் இப்போட்டியில் வெல்லும் ரசிகர்களுக்கு வழங்கப்படுகிறது.

உலகின் தலைசிறந்த விஜய் ரசிகராகத் தேர்வு செய்யப்படுபவருக்கு பஜாஜ் பல்சர் 150 பைக் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT