செய்திகள்

கரோனாவால் உயிரிழந்த தமிழ் நடிகர்

15th Sep 2020 03:29 PM

ADVERTISEMENT

 

கரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகரும் ஊடகத்தைச் சேர்ந்தவருமான பிளோரண்ட் சி பெரேரா உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 67.

2003-ல் வெளியான புதிய கீதை படத்தின் மூலம் திரையுலகுக்கு நடிகராக அறிமுகமானார். சத்ரியன், வேலையில்லா பட்டதாரி 2, கயல் போன்ற படங்களில் நடித்துள்ளார். கலைஞர், வின், விஜய் தொலைக்காட்சிகளிலும் பணியாற்றியுள்ளார்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட பிளோரண்ட் சி பெரேரா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமாகியுள்ளார். 

ADVERTISEMENT

பிளோரண்ட் சி பெரேராவின் மறைவுக்குப் பிரபல இயக்குநர் சீனு ராமசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

 

 

Tags : COVID 19 Florent C Pereira
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT