செய்திகள்

சுந்தர்.சி தயாரிக்கும் படம்: பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது

14th Sep 2020 02:52 PM

ADVERTISEMENT

 

பிரசன்னா, ஷாம் நடிப்பில் சுந்தர்.சி தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.

இந்த வருடம் வெளியான கன்னடப் படமான மாயாபஸார் 2016 படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதன் உரிமையை சுந்தர்.சி பெற்றுள்ளார். 

வீராப்பு, தில்லு முல்லு படங்களை இயக்கிய பத்ரி, மாயாபஸார் 2016 ரீமேக்கைத் தமிழில் இயக்குகிறார். 

ADVERTISEMENT

பிரசன்னா, ஷாம், அஸ்வின், யோகி பாபு, ஷ்ருதி மராத்தே போன்றோர் நடிக்கிறார்கள். இசை - சத்யா. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

ஆர்யா, ராஷி கண்ணா நடிப்பில் அரண்மனை 3 படத்தை சுந்தர்.சி இயக்கி வருகிறார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT