செய்திகள்

அட்லியின் இயக்கத்தில் நடிக்கும் ஷாருக் கான் & தீபிகா படுகோன்

14th Sep 2020 04:41 PM

ADVERTISEMENT

 

கடந்த வருடம் ஏப்ரல் 10 அன்று சென்னையில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளின் ஐபிஎல் ஆட்டத்தை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானுடன் இணைந்து பார்த்தார் இயக்குநர் அட்லி. 

அதிலிருந்து ஷாருக் கானை அட்லி இயக்கவுள்ளார் என்று தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதன்பிறகு விஜய் நடித்த பிகில் பட டிரெய்லரை ஷாருக் கான் ட்விட்டரில் வெளியிட்டார்.

இந்நிலையில் ஷாருக் கானை அட்லி இயக்கும் படம் குறித்த மேலதிகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

அட்லி இயக்கும் படத்தில் ஷாருக் கானுடன் மீண்டும் ஜோடி சேர்கிறார் பிரபல நடிகை தீபிகா படுகோன்.

ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ், ஹாப்பி நியூ இயர் படங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார்கள். இந்தப் படத்துக்கு சன்கி என தற்காலிகமாகப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடைசியாக, 2018-ல் ஷாருக் கான் நடிப்பில் ஜீரோ படம் வெளியானது. அடுத்ததாக ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதன்பிறகு 2021-ல் அட்லி படத்தில் அவர் நடிப்பார் என அறியப்படுகிறது. 

Tags : atlee
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT