செய்திகள்

விஜய் சேதுபதி, டாப்சி நடிக்கும் படம்: ஜெய்ப்பூரில் படப்பிடிப்பு

14th Sep 2020 05:07 PM

ADVERTISEMENT

 

இயக்குநர் சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் விஜய் சேதுபதி, டாப்சி, ராதிகா, யோகி பாபு போன்றோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் தொடங்கியுள்ளது. விஜய் சேதுபதி, ராதிகா உள்ளிட்ட நடிகர்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்கள். விஜய் சேதுபதி மற்றும் இதர நடிகர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை நடிகை ராதிகா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 

ஏ.எல். விஜய்யுடன் உதவி இயக்குநராக தீபக் பணியாற்றியுள்ளார். பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரே கட்டமாக நடத்தி முடிக்கவுள்ளார்கள். 

ADVERTISEMENT

Tags : Vijay Sethupathi Taapsee
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT