செய்திகள்

வடிவேல் பாலாஜி குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக்கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன்

11th Sep 2020 03:25 PM

ADVERTISEMENT

 

நடிகர் வடிவேல் பாலாஜியின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

நடிகா்  வடிவேல் பாலாஜி (42)   மாரடைப்பு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை காலமானாா். 

இரு வாரங்களுக்குத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வடிவேல் பாலாஜி சில தினங்களுக்கு முன்பு வீட்டுக்குத் திரும்பியுள்ளார். பிறகு அவருக்கு மீண்டும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் வடிவேல் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை மரணமடைந்தார். வடிவேல் பாலாஜிக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.  இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகின்றன. 

ADVERTISEMENT

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்தபோது சிரிச்சா போச்சு பகுதியில் வடிவேல் பாலாஜி பங்கேற்றுள்ளார். இருவரும் கூட்டணி அமைத்து நகைச்சுவை வெடிகளை அள்ளி வீசியதால் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றார்கள். இதனால் இருவரும் சொந்தமாக நகைச்சுவையை வெளிப்படுத்த சுதந்திரம் கிடைத்துள்ளது.

தன்னுடைய நெருங்கிய நண்பராக இருந்த வடிவேல் பாலாஜியின் மரணம் சிவகார்த்திகேயனை உலுக்கியுள்ளது. இதனால் வடிவேல் பாலாஜியின் இரு குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாகக் கூறியுள்ளார். இதைப் பற்றி சிவகார்த்திகேயன் முறையாக அறிவிக்கவில்லையென்றாலும் வடிவேல் பாலாஜியின் குடும்பத்தினரிடம் இத்தகவலைக் கூறி நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார்.

சிவகார்த்திகேயனின் இந்த நடவடிக்கைக்கு ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்கள் வழியாகப் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

Tags : Sivakarthikeyan Vadivel Balaji
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT