செய்திகள்

இசைக்கலைஞர்களுக்கு நிதி திரட்டும் முயற்சியில் பங்கேற்கும் கமல், ரஹ்மான்

11th Sep 2020 05:20 PM

ADVERTISEMENT

 

கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள இசைக்கலைஞர்களுக்கு உதவுவதற்காக நடத்தப்படும் ஒரு குரலாய் என்கிற இணைய இசை நிகழ்ச்சியில் கமல் ஹாசன், ரஹ்மான் பங்கேற்கிறார்கள்.

கரோனா ஊரடங்கால் வறுமையில் வாடும் இசைக்கலைஞர்களுக்கு உதவுவதற்காக யுனைடெட் சிங்கர்ஸ் அறக்கட்டளை சார்பில் ஒரு குரலாய் என்கிற இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. செப்டம்பர் 12 அன்று இந்திய நேரம் மாலை 6 மணிக்கு ஃபேஸ்புக், யூடியூப் சமூகவலைத்தளங்கள் வழியாக இந்நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. பாடகர்கள் ஹரிஹரன், ஷ்ரேயா கோஷல், சங்கர் மகாதேவன் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட பின்னணிப் பாடகர்கள் கலந்துகொள்கிறார்கள். நடிகர் கமல் ஹாசனும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் சிறப்பு அழைப்பாளர்களாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். அனைவரும் தமிழ்ப் பாடல்களைப் பாடவுள்ளார்கள். இந்நிகழ்ச்சியைப் பார்க்கும் ரசிகர்கள் விருப்பப்பட்டால் நன்கொடை அளிக்கலாம். 

யுனைடெட் சிங்கர்ஸ் என்கிற அமைப்பு பாடகர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம் நிதி திரட்டி கடினமான சூழல்களில் அவதிப்படும் பாடகர்களுக்கு உதவுவதற்காக இந்த அமைப்பை மற்ற பாடகர்களின் துணையுடன் தொடங்கியுள்ளார் பாடகர் ஸ்ரீனிவாஸ். ஒரு குரலாய் நிகழ்ச்சி பற்றி அவர் கூறியதாவது:

ADVERTISEMENT

கோயில், திருமண நிகழ்ச்சிகளில் பாடும், பங்கேற்கும் இசைக்கலைஞர்கள் பலரும் கரோனா ஊரடங்கால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒரு இசைக்கலைஞர், காய்கறி விற்கவும் தயாராக உள்ளதாகக் கூறுகிறார். இதனால் தான் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம் என்றார்.

இந்நிகழ்ச்சி மூலம் திரட்டப்படும் நிதி, கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த கலைஞர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படவுள்ளது.

Tags : Kamal AR rahman
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT