செய்திகள்

அஜித் படத்தைத் தயாரிக்கிறதா ஏஜிஎஸ் நிறுவனம்?: அர்ச்சனா கல்பாத்தி விளக்கம்

10th Sep 2020 01:11 PM

ADVERTISEMENT

 

இந்த வருடம் நாங்கள் எந்தப் படத்தையும் தயாரிக்க முன்வரவில்லை என ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அஜித் நடிப்பில் சூரரைப் போற்று இயக்குநர் சுதா கொங்கரா புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும் அப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் இதுபற்றி ஏஜிஎஸ் நிறுவனம் சார்பாக அதன் கிரியேடிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் கூறியதாவது:

ADVERTISEMENT

2020-ம் ஆண்டில் இதுவரை நாங்கள் எந்தவொரு படத்தையும் தயாரிக்க முடிவெடுக்கவில்லை. சில தவறான செய்திகள் வலம் வருகின்றன. அதனால் இதுகுறித்து தெளிவுபடுத்துகிறோம். நாங்கள் யாரையும் புதிய படம் தொடர்பாகச் சந்திக்கவில்லை. விவாதிக்கவில்லை. நாங்கள் காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் கடந்த வருடம் வெளியானது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT