செய்திகள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மொழியை அவமதித்த போட்டியாளர்: மகனுக்காக மன்னிப்பு கோரிய பிரபல பாடகர்

DIN

மராத்தி மொழியை அவமதிக்கும் விதத்தில் என் மகன் பேசியதற்காக மன்னிப்பு கோருகிறேன் எனப் பிரபல பாடகர் குமார் சானு கூறியுள்ளார்.

ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் குமார் சானுவின் மகனும் பாடகருமான ஜான் கலந்துகொண்டுள்ளார். சக போட்டியாளர் நிக்கி தம்போலி தன்னிடம் மராத்தி மொழியில் உரையாடியதற்கு ஜான் பேசியதாவது: என் முன்னால் மராத்தியில் பேச வேண்டாம். இது எனக்கு எரிச்சலூட்டுகிறது. தைரியம் இருந்தால் என்னுடன் ஹிந்தியில் உரையாடு. இல்லாவிட்டால் அமைதியாக இரு என்றார். 

இந்த உரையாடல் ஒளிபரப்பான பிறகு மராத்தி மொழியை அவமதித்ததாக சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து தொலைக்காட்சி நிர்வாகமும் ஜானும் இதற்காக மன்னிப்பு கோரினார்கள். 

ஜானின் தாய் ரீடா, தந்தை குமார் சானு ஆகிய இருவரும் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்கள். 

ஒரு பேட்டியில் ரீடா கூறியதாவது:

இதை ஒரு விளையாட்டாக அனைவரும் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். ஜான், ராகுல், நிக்கி ஆகிய இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது ராகுலும் நிக்கியும் மராத்தியில் பேசினார்கள். என் மகனுக்கு மராத்தி தெரியாது. அதனால் தான் மராத்தியில் பேசுவதைத் தவிர்க்கும்படி கோரிக்கை விடுத்தான். ஏனெனில் அவர்கள் தன்னைப் பற்றி பேசுகிறார்கள் என நினைத்துக்கொண்டான். சூழலைப் புரிந்துகொண்டு ஒரு முடிவு எடுங்கள். நாங்கள் எப்படி மராத்தி மொழியை அவமதிப்போம்? மஹாராஷ்டிராவில் தான் பல வருடங்களாக வசித்து வருகிறோம். எங்களுக்கு நிறைய அன்பும் அவனுடைய தந்தைக்கு நிறைய மரியாதையையும் இந்த மாநிலம் அளித்துள்ளது. தவறான புரிதல்கள் தேவையில்லாத மன அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. என் மகன் வங்காள மொழியிலும் ஒவ்வொரு போட்டியாளரும் அவருடைய மாநில மொழியிலும் பேசினால் ஒப்புக்கொள்வீர்களா? அவன் ஒரு குழந்தை. அவனைத் தொந்தரவு செய்யவேண்டாம். மஹாராஷ்டிராவை நாங்கள் வணங்குகிறோம் என்றார்.

விடியோ வழியாக குமார் சானு கூறியதாவது:

கடந்த 41 வருடங்களாக எனக்குத் தோன்றாத ஒன்றை என் மகன் பேசியுள்ளதாக அறிகிறேன். அவர்களுடன் கடந்த 27 வருடங்களாக வசிக்கவில்லை. என் மகன் என்ன சொல்லி வளர்க்கப்பட்டார் என்று எனக்குத் தெரியவில்லை. அவனை அவனுடைய தாய் எப்படி வளர்த்தார் என்று தெரியவில்லை. அவன் எப்படி அப்படிப் பேசலாம்? மஹாராஷ்டிரா, மும்பை, மும்பை தேவி என்னை வாழ்த்தி பேரும் புகழும் அளித்துள்ளார்கள். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் நான் மதிக்கிறேன். பல மொழிகளில் நான் பாடியுள்ளேன். இதை எப்படி என் மகன் சொன்னான் எனத் தெரியவில்லை. ஒரு தந்தையாக அனைவரிடமும் நான் மன்னிப்பு கோருகிறேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

SCROLL FOR NEXT