செய்திகள்

நான் குடும்பத்தைப் பிரிந்து இருக்கவில்லையா?: பிக் பாஸ் போட்டியாளர்களின் அழுகை குறித்து பாவனா விமர்சனம்!

29th Oct 2020 05:06 PM

ADVERTISEMENT

 

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த வருடம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியைப் பிரபல நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

முதல் நாளில் ரம்யா பாண்டியன், ஆஜித், ஆரி, அனிதா சம்பத், வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சோம், ஷிவானி, சனம் ஷெட்டி, பாலா, கேப்ரியலா, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, ரேகா, ரியோ, சம்யுக்தா என 16 பேர் பிக் பாஸ் இல்லத்துக்குள் நுழைந்தார்கள். பிறகு பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா புதிய போட்டியாளராக நுழைந்தார். 

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. குடும்பத்தை விட்டு பிக் பாஸ் இல்லத்துக்குள் வசிக்கும் போட்டியாளர்கள் பலமுறை குடும்பத்தை நினைத்து உணர்ச்சிவசப்பட்டு அழுவார்கள். இந்தமுறையும் பல போட்டியாளர்கள் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் ஞாபகம் வந்து அழுதார்கள்.

ADVERTISEMENT

இந்நிலையில் அவர்களுடைய இந்த நடவடிக்கையைப் பிரபல தொகுப்பாளர் பாவனா விமர்சனம் செய்துள்ளார். ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் தொகுப்பாளராகப் பணியாற்றி வரும் பாவனா, கரோனா பாதுகாப்பு வளையத்தில் உள்ளார். பிக் பாஸ் போட்டியாளர்களையும் தன்னையும் ஒப்பீடு செய்து அவர் கூறியதாவது:

என் குடும்பத்தை விட்டு கரோனா பாதுகாப்பு வளையத்தில் கடந்த 50 நாள்களாக உள்ளேன். இதற்காக நான் அழவில்லை. உணர்ச்சிவசப்படவில்லை. எல்லோரையும் என் தாய், என் சகோதரர், சகோதரி என அழைக்கவில்லை. உண்மையான, நெருங்கிய நண்பர்கள் என்னுடன் இருக்கிறார்கள். இதற்காக மகிழ்ச்சியடைகிறேன். பிக் பாஸ் போட்டியாளர்கள் மூன்று வாரங்களுக்குப் பிறகு இதையெல்லாம் செய்வது எந்தளவுக்கு முட்டாள்தனமானது. அதிகமான நாடகத்தனம் என்று கூறியுள்ளார்.

Tags : Bigg Boss Bhavna
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT