செய்திகள்

சமூகவலைத்தளங்களில் வெளியான அஜித்தின் புதிய புகைப்படங்கள்

29th Oct 2020 05:34 PM

ADVERTISEMENT

 

நேர் கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணி மீண்டும் தொடர்கிறது. இருவரும் இணைந்துள்ள இப்படத்துக்கு வலிமை எனப் பெயரிடப்பட்டுள்ளது. போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு - நிரவ் ஷா. வலிமை படம் நேரடியாகத் திரையரங்குகளில் தான் வெளியாகும் என போனி கபூர் அறிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்டிருந்த வலிமை படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் மீண்டும் தொடங்கியது. தற்போது இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அஜித்தும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் ஹைதராபாத் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட அஜித்தின் சமீபத்திய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. நீண்டநாள் கழித்து அஜித்தின் புதிய புகைப்படங்கள் வெளியானதால் அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.

ADVERTISEMENT

Tags : valimai ajith stills
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT