செய்திகள்

பாராட்டு பெற்ற புதிய புகைப்படங்கள்: காரணம் சொல்லும் நடிகர் விவேக்

28th Oct 2020 04:07 PM

ADVERTISEMENT

 

தனது புதிய புகைப்படங்களைப் பலரும் பாராட்டுவதற்கு ஆடை வடிவமைப்பாளர் சத்யா தான் காரணம் என நடிகர் விவேக் கூறியுள்ளார். 

நடிகர் விவேக்கின் சமீபத்திய புகைப்படங்கள் அதிகப் பாராட்டைப் பெற்றுள்ளன. நிர்மல் வேதாச்சலம் எடுத்த புகைப்படங்களில் வெள்ளை உடைகளுடன் வெள்ளை திரைச்சீலை பின்னணியில் விவேக் போஸ் கொடுத்துள்ளார். சால்ட் அண்ட் பெப்பரில் உள்ள விவேக்கின் தோற்றமும் அழகான புகைப்படங்களும் பாராட்டுகளைப் பெற்றுள்ளன, 

இந்நிலையில் புகைப்படங்களுக்குக் கிடைத்த வரவேற்பு பற்றி ட்விட்டரில் விவேக் கூறியதாவது:

ADVERTISEMENT

என் சமீபத்திய போட்டோ ஷூட் திரையுலகினராலும் பிறராலும் பாராட்டப்படுகிறது. அதற்கு முழு காரணம் ஆடை வடிவமைப்பாளர் சத்யாவும் அவருடைய குழுவும்தான் என்று எழுதியுள்ளார்.

Tags : vivek
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT