செய்திகள்

மத அரசியலை விமர்சிக்கும் மூக்குத்தி அம்மன் டிரெய்லர்!

26th Oct 2020 10:38 AM

ADVERTISEMENT

 

அம்மன் வேடத்தில் பிரபல நடிகை நயன்தாரா நடித்துள்ள படம் - மூக்குத்தி அம்மன்.

இப்படத்தை ஆர்ஜே பாலாஜியும் என்ஜே சரவணனும் இணைந்து இயக்கியுள்ளார்கள். 

மே மாதம் வெளிவருவதாக இருந்த இப்படத்தின் வெளியீடு கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மூக்குத்தி அம்மன் படம் தீபாவளியன்று டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த வருஷம் தீபாவளிக்கு மூக்குத்தி அம்மன் வருகிறாள் என்று ஆர்ஜே பாலாஜி சமீபத்தில் ட்வீட் செய்தார். 

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. மத அரசியலை விமர்சிக்கும் காட்சிகளும் தமிழ்நாட்டுல மட்டும் தான் மதத்தை வைச்சு இன்னும் ஓட்டு வாங்க முடியலை. அடுத்த ஐஞ்சு வருஷத்துல அதை நான் வாங்கிக் காட்டுவேன் என்கிற வசனமும் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளதால் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓடிடிக்குப் பதிலாக திரையரங்கில் நேரடியாக வெளியாக வேண்டிய படம் இது என டிரெய்லரைப் பார்த்த பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

Tags : Mookuthi Amman Cinema
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT