செய்திகள்

கசிந்த அவசர சிகிச்சைப் பிரிவு புகைப்படம்: பிரபல நடிகரின் மகள் கண்டனம்

14th Oct 2020 12:39 PM

ADVERTISEMENT

 

அவசர சிகிச்சைப் பிரிவில் தன்னுடைய தந்தை சிகிச்சை பெறும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியானதற்கு செளமித்ர சாட்டர்ஜியின் மகள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரபல வங்காள நடிகர் செளமித்ர சாட்டர்ஜி, கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல இயக்குநர் சத்யஜித் ரேயின் இயக்கத்தில் அறிமுகமாகி, அவருடன் 14 படங்களில் இணைந்து பணியாற்றிவர் செளமித்ர சாட்டர்ஜி. மிருணாள் சென் உள்ளிட்ட பிரபல இயக்குநர்களின் படங்களிலும் நடித்துள்ளார். 

ADVERTISEMENT

85 வயது செளமித்ர சாட்டர்ஜி, சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இருமுறை பெற்றுள்ளார். பத்ம பூஷண், தாதா சாகேப் பால்கே விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

கரோனா அறிகுறிகள் இருந்ததால் செளமித்ர சாட்டர்ஜிக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த அக்டோபர் 5 அன்று, அவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் செளமித்ர சாட்டர்ஜி அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியானது. இதற்கு செளமித்ர சாட்டர்ஜியின் மகள் பெளலமி போஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

என்னுடைய தந்தையின் உடல்நிலை தற்போது உள்ள நிலையில் அவர் சிகிச்சை பெறும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி இருப்பது வேதனையை அளிக்கிறது. அவருக்குரிய மரியாதையை அனைவரும் அளியுங்கள். அவர் சிகிச்சை பெறும் புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் பகிரவேண்டாம் என்று கூறியுள்ளார். 

85 வயது செளமித்ர சாட்டர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகச் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Soumitra Chatterjee Cinema
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT