செய்திகள்

கரோனா கால நிவாரணம்: கட்டணத்தைப் பாதியாகக் குறைத்தது கியூப் நிறுவனம்

14th Oct 2020 12:15 PM

ADVERTISEMENT

 

கியூப் உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழகத் திரையரங்குகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படங்களைத் திரையிட்டு வருகின்றன. 10 வருடங்களாக கியூப் கட்டணத்தை தயாரிப்பாளர்களாகிய நாங்கள் செலுத்தி வருகிறோம். இனி அக்கட்டணத்தைச் செலுத்த முடியாது என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பாரதிராஜா சமீபத்தில் தெரிவித்தார். 

இந்நிலையில் தனது கட்டணத்தை டிசம்பர் இறுதி வரை பாதியாகக் குறைத்துள்ளது கியூப் நிறுவனம். இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தயாரிப்பாளர்களுக்குச் கரோனா கால சிறப்பு நிவாரணத் திட்டத்தை கியூப் அறிவிக்கிறது. இதன்மூலம் ஊரடங்குக் காலத்தில் படங்களைத் திரையிட உதவியாக இருக்கும். இந்தத் திட்டம், நிதிச்சுமையைக் குறைத்து வருவாயை அதிகரிக்கும் வாய்ப்புகளை உருவாக்குவதால் திரையரங்குகளில் புதிய படங்கள் அதிகமாக வெளியாகும்.  

ADVERTISEMENT

மீண்டு வரும் இந்தக் காலக்கட்டத்தில் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என கியூப் நிறுவனம் எண்ணுகிறது. கரோனாவால் நிதிச் சிக்கலில் உள்ள தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இந்தத் திட்டம் உதவியாக இருக்கும்.

இதன்மூலம், புதிய படங்களின் விபிஎஃப் கட்டணம் தற்போதைய கட்டணத்திலிருந்து 50% குறைக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 7 காட்சிகளுக்குத் திரையிடப்படும் படங்களுக்கு இந்தத் தள்ளுபடி அமலாகும். திரையரங்குகள் திறக்கப்படும் தேதியிலிருந்து டிசம்பர் 31, 2020 வரை இந்தத் தள்ளுபடி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.   

Tags : Qube Cinema
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT