செய்திகள்

ஜேம்ஸ் பாண்ட் பட நடிகை காலமானார்

14th Oct 2020 05:08 PM

ADVERTISEMENT

 

ஜேம்ஸ் பாண்ட் படமான கோல்ட் ஃபிங்கரில் நடித்த மார்கரெட் நோலன் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 76.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மார்கரெட் நோலன் சிகிச்சை பலன்றி காலமானதாக அவருடைய மகன் ஆஸ்கர் டீக்ஸ் தெரிவித்துள்ளார். 

1964-ல் ஜேம்ஸ் பாண்ட் படமான கோல்ட் ஃபிங்கரில் நடித்து புகழ்பெற்றார் மார்கரெட் நோலன். தங்க உடை அணிந்து அவர் நடித்தது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. 20 வயதில் எதிர்பாராத விதத்தில் மிகப்பெரிய புகழை அப்படம் தனக்குத் தந்ததாக ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டார். 

ADVERTISEMENT

1943-ல் லண்டனில் பிறந்த மார்கரெட் நோலன், மாடலாக இருந்து பிறகு நடிகையாக மாறினார். மறைந்த நோலனுக்கு இரு மகன்கள் உள்ளார்கள். 

1962 முதல் நடிக்க ஆரம்பித்த நோலன் 1986-க்குப் பிறகு படங்களில் நடிப்பதை அடியோடு குறைத்துக்கொண்டார். 2011-ல் ஒரு படத்தில் நடித்தவர் சமீபத்தில், லாஸ்ட் நைட் இன் சோஹோ என்கிற படத்தில் நடித்தார். அப்படம் இன்னும் வெளிவரவில்லை. 

மார்கரெட் நோலனின் மறைவுக்கு ஹாலிவுட் கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

Tags : Cinema Margaret Nolan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT