செய்திகள்

நடிகர் கார்த்திக்கு இரண்டாவது குழந்தை

7th Oct 2020 02:59 PM

ADVERTISEMENT

 

நடிகர் கார்த்தி தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவிருக்கிறது.

நடிகர் கார்த்தி, 2011-ல் ரஞ்சனியைத் திருமணம் செய்தார். இருவருக்கும் 2013-ல் பிறந்த குழந்தை உமையாள். 

இந்நிலையில் இரண்டாவது குழந்தைக்குத் தந்தையாகவுள்ளார் கார்த்தி. தற்போது 2-வது முறையாகக் கர்ப்பமாக உள்ளார் ரஞ்சனி. முதல் மூன்று மாதங்களுக்கு அவர் சென்னையில் இருந்தார். அதன்பிறகு அவர் தனது சொந்த ஊரான கவுண்டம்பாளையத்துக்குச் சென்றுவிட்டார். இதனால் விரைவில் 2-வது குழந்தைக்குத் தந்தையாகும் கார்த்திக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

ADVERTISEMENT

மணி ரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் மற்றும் சுல்தான் ஆகிய படங்களில் கார்த்தி நடித்து வருகிறார். மித்ரன் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்கவுள்ளார். 

Tags : Karthi Ranjani
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT