செய்திகள்

கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார் பிரபல பாலிவுட் நடிகர்

7th Oct 2020 01:18 PM

ADVERTISEMENT

 

பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜூன் கபூர், கரோனா பாதிப்பிலிருந்து குணமாகியுள்ளார். 

தயாரிப்பாளரும் மறைந்த ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூரின் மகன் அர்ஜூன் கபூர் (போனி கபூரின் முதல் மனைவியின் மகன்). 35 வயதான இவர், 2 ஸ்டேட்ஸ், கி & கா படங்களில் நடித்துக் கவனம் பெற்றவர். 

தனக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதாகக் கடந்த மாதம் அர்ஜூன் கபூர் அறிவித்தார். அறிகுறிகள் எதுவும் இல்லை. மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்றார்.

ADVERTISEMENT

இந்நிலையில் கரோனாவிலிருந்து தான் குணமாகியுள்ளதாக அர்ஜூன் கபூர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:

சமீபத்திய பரிசோதனையில் முடிவில் எனக்கு கரோனா இல்லை என முடிவாகியுள்ளது. முழுவதும் குணமான பிறகு தற்போது நன்றாக உள்ளேன். மீண்டும் பணிக்குத் திரும்ப ஆவலாக உள்ளேன். எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி. 

இந்த வைரஸ் மிகவும் தீவிரமானது. எனவே யாரும் இதை லேசாக எண்ணிவிட வேண்டாம். இளைஞர்கள், முதியோர் என அனைவரையும் இந்த கரோனா பாதிக்கிறது. எனவே எப்போது முகக்கவசம் அணிந்திருங்கள். கரோனா தடுப்புப் பணியாளர்கள் அனைவருக்கும் என்னுடைய பெரிய சல்யூட் என்று கூறியுள்ளார். 

Tags : Arjun Kapoor COVID 19
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT