செய்திகள்

பிரபல நடிகர் அஜய் தேவ்கனின் சகோதரர் காலமானார்

7th Oct 2020 12:37 PM

ADVERTISEMENT

 


பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் சகோதரரும் இயக்குநருமான அனில் தேவ்கன் காலமாகியுள்ளார்.

தனது சகோதரரை இழந்தது குறித்து அஜய் தேவ்கன் ட்விட்டரில் கூறியதாவது:

நேற்றிரவு எனது சகோதரர் அனில் தேவ்கனை இழந்துவிட்டேன். அவருடைய மரணத்தால் எங்களுடைய குடும்பம் உடைந்து போயிருக்கிறது என்று கூறியுள்ளார். 

ADVERTISEMENT

1996 முதல் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்த அனில் தேவ்கன், 2000-ம் ஆண்டு ராஜூ சாச்சா என்கிற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்தில் ரிஷி கபூர், அஜய் தேவ்கன், கஜோல் போன்றோர் நடித்தார்கள். பிறகு பிளாக்மெயில் என்கிற படத்தை இயக்கிய அனில் தேவ்கன், கடைசியாக 2008-ல் ஹால் இ தில் என்கிற படத்தை இயக்கினார். அவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளார்கள். 

Tags : Ajay Devgn Anil Devgan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT