செய்திகள்

எஸ்.பி.பி.யின் நினைவிடத்தைப் பார்வையிட பொதுமக்களுக்கு இரு நாள்களுக்கு அனுமதி

1st Oct 2020 03:54 PM

ADVERTISEMENT

 

தாமரைப்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் நினைவிடத்தைப் பார்வையிட பொதுமக்களுக்கு 2 நாள்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவரது உடல் தாமரைப்பாக்கம் - செங்குன்றம் சாலையில் உள்ள பண்ணை வீட்டில் காவல் துறை மரியாதையுடன் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு திரைத் துறையினா், அரசியல் பிரமுகா்கள் அஞ்சலி செலுத்தினா்.

இந்நிலையில் தாமரைப்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் நினைவிடத்தைப் பார்வையிட பொதுமக்களுக்கு 2 நாள்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் இரு தினங்களுக்கு மட்டும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மற்றும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பார்வையிடத் தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : SP Balasubrahmanyam farmhouse
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT