செய்திகள்

திருடா திருடி படத் தயாரிப்பாளர் காலமானார்

1st Oct 2020 11:41 AM

ADVERTISEMENT

 

தனுஷ் நடித்த திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன் போன்ற படங்களைத் தயாரித்த கிருஷ்ணகாந்த் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 52.

திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், விக்ரம் நடித்த கிங், சிம்பு நடித்த மன்மதன், துஷ்யந்த் நடித்த மச்சி, விவேக் நடித்த சொல்லி அடிப்பேன் போன்ற படங்களைத் தயாரித்தவர் கிருஷ்ணகாந்த். தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற தயாரிப்பாளராக இருந்த கிருஷ்ணகாந்த் சமீபகாலமாக எந்தப் படங்களையும் தயாரிக்கவில்லை.  

இந்நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் காலமாகியுள்ளார். 

ADVERTISEMENT

டி. ராஜேந்தர், திருடா திருடி இயக்குநர் சுப்ரமணியம் சிவா உள்ளிட்ட திரையுலகினர் பலரும் கிருஷ்ணகாந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

Tags : Krishnakanth Producer
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT