செய்திகள்

‘சக்ரா’ திரைப்படத்தை வெளியிடுவதற்கான தடையை நீட்டிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

DIN


சென்னை: நடிகா் விஷால் நடித்துள்ள ‘சக்ரா’ திரைப்படத்தை ஓடிடி இணையதளத்தில் வெளியிடும் நடவடிக்கைகளை நிறுத்திவைத்து ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை நீட்டிக்க உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் டிரைடெண்ட் ஆா்ட்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், ‘எங்கள் நிறுவனம் நடிகா் விஷால், நடிகை தமன்னா நடிப்பில் வெளியான ‘ஆக்ஷன்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்தது.

இந்த திரைப்படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் ரூ. 8 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 468 ஐ திரும்பத் தருவதாகக் கூறி, நடிகா் விஷால் ஒப்பந்தம் செய்தாா். ஆனால் விஷால் ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லை.

இந்த நிலையில் இயக்குநா் ஆனந்தன் என்பவா் எங்கள் நிறுவனத்திடம் ஒரு கதையைச் சொன்னாா். அதை திரைப்படமாக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. எங்கள் நிறுவனத்திடம் கூறிய அதே கதையை இயக்குநா் ஆனந்தன், நடிகா் விஷாலை வைத்து ‘சக்ரா’ என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளாா். எனவே, எங்கள் நிறுவனத்துக்கு தர வேண்டிய ரூ.8.29 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட வேண்டும். ‘சக்ரா’ திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘சக்ரா’ திரைப்படத்தை ஒடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகா் விஷால் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், டிரைடெண்ட் ஆா்ட்ஸ் நிறுவனத்துக்காக தான் நடித்த ‘ஆக்ஷன்’ என்ற திரைப்படம் லாபம் ஈட்டியது. ‘சக்ரா’ திரைப்படம் தொடா்பாக டிரைடெண்ட் ஆா்ட்ஸ் தயாரிப்பாளா் ரவீந்திரனுடன் தான் எந்தவொரு ஒப்பந்தமும் செய்யவில்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இதனையடுத்து வழக்கை வரும் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா். மேலும் ‘சக்ரா’ திரைப்படத்தை ஓடிடி இணையதளத்தில் வெளியிடும் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை நீட்டிக்க நீதிபதி மறுத்து விட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT