செய்திகள்

அந்தாதுன் மலையாள ரீமேக்கில் பிருத்விராஜ், ரவி கே. சந்திரன்?

30th Nov 2020 12:02 PM

ADVERTISEMENT

 

ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் உருவான அந்தாதுன் படம், இந்தியாவில் 2018 அக்டோபர் மாதம் வெளியாகி, ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. எனினும் சீனாவில் இந்தப் படத்தின் வசூல் நம்பமுடியாத வகையில் இருந்தது. அங்கு அதன் வசூல் ரூ. 300 கோடியைத் தாண்டியது. இதன்மூலம் சீனாவில் அதிகம் வசூலித்த ஹிந்திப் படங்களில் 3-ம் இடத்தைப் பிடித்தது. டங்கல் (1,200 கோடி), சீக்ரெட் சூப்பர் ஸ்டார் (ரூ. 700 கோடி) படங்களுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது அந்தாதுன்.

சிறந்த நடிகர் - (ஆயுஷ்மன் குரானா), சிறந்த திரைக்கதை (தழுவல்), சிறந்த ஹிந்திப் படம் என மூன்று தேசிய விருதுகளையும் பெற்று அசத்தியது. 

அந்தாதுன் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பிரட்ரிக் அந்தாதுன் தமிழ் ரீமேக்கை இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

இந்நிலையில் அந்தாதுன் படம் மலையாளத்திலும் ரீமேக் ஆகவுள்ளது. இதுகுறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆயுஷ்மன் குரானா வேடத்தில் பிருத்விராஜ் நடிக்கவுள்ளார் என்றும் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன் மலையாள ரீமேக்கை இயக்க சம்மதித்துள்ளதாகவும் அறியப்படுகிறது. மம்தா மோகன்தாஸ், அஹானா கிருஷ்ணா போன்ற நடிகைகளும் இப்படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Tags : Andhadhun Prithviraj
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT