செய்திகள்

நடிகர் விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

30th Nov 2020 05:39 PM

ADVERTISEMENT

 


சென்னையில் நடிகர் விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை மாநில காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு இன்று ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், சென்னை பெசன்ட் நகர் பகுதியில் வசித்து வரும் நடிகர் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்து விடும் எனவும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளாா். இதைக் கேட்டு அதிா்ச்சி அடைந்த கட்டுப்பாட்டு அறை போலீஸார், உடனடியாக காவல் துறை உயா் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனா்.

அதிகாரிகளின் உத்தரவின்பேரில் போலீஸாரும், வெடிகுண்டு கண்டறியும் பிரிவினரும் விக்ரம் வீட்டில் சோதனை செய்தனா். பல மணி நேரம் நடைபெற்ற இச்சோதனையில் அங்கிருந்து எந்த வெடிப்பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. 

ADVERTISEMENT

இதையடுத்து வதந்தியைப் பரப்பும் நோக்கில் அந்த அழைப்பு வந்திருப்பது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து சென்னை போலீஸாா், சைபா் குற்றப்பிரிவுடன் இணைந்து அந்த அழைப்பு குறித்து விசாரணை செய்தார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணத்தில் இருந்து மிரட்டல் விடுத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

Tags : Bomb threat Vikram
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT