செய்திகள்

புதிய திறமைகளை ஊக்குவிக்கும் திட்டம்: பாஃப்டா தூதராக ஏ.ஆர். ரஹ்மான் தேர்வு

30th Nov 2020 12:38 PM

ADVERTISEMENT

 

ஆஸ்கர் விருது வென்ற பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பாஃப்டா அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் என்கிற பாஃப்டா அமைப்பு, திரைப்பட விருதுகளை வருடந்தோறும் வழங்கி திரைப்படக் கலைஞர்களை ஊக்குவித்து வருகிறது. 

இந்நிலையில் இந்தியாவில் உள்ள கலைஞர்களின் திறமைக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது பாஃப்டா அமைப்பு. இதற்காக, பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை அதன் தூதராக நியமித்துள்ளது.

ADVERTISEMENT

திரைப்படம், தொலைக்காட்சி, விளையாட்டு போன்றவற்றில் உள்ள அபாரமான திறமைகளைக் கண்டறிவதற்காக பாஃப்டாவுடன் இணைந்து பணிபுரிவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதன்மூலம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பாஃப்டா அமைப்பின் ஆதரவு, வளரும் கலைஞர்களுக்குக் கிடைக்கும். பாப்டாவின் திட்டத்தில் தேர்வாகும் இந்தியத் திறமையாளர்களுக்கு இதர கலைஞர்களுடன் தொடர்பு கிடைப்பதோடு, பாஃப்டா விருது வென்ற கலைஞர்களின் ஊக்கமும் கிடைக்கும். இந்தியாவின் மிகச்சிறந்த திறமைகள் உலகளவில் அறியப்படுவதைக் காண ஆவலாக உள்ளேன் என்று புதிய பொறுப்பு பற்றி கூறியுள்ளார் ரஹ்மான்.

இதன் முதற்கட்டமாக பாஃப்டா அமைப்பு, இந்தியாவின் ஐந்து திறமைகளைக் கண்டறிந்து அவர்களின் வளர்ச்சிக்கு உதவி செய்யும். பாஃப்டா பிரேக்த்ரூ என்கிற இத்திட்டம் இங்கிலாந்தில் 2013 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த வருடம் சீனாவில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்திய பாஃப்டா அமைப்பு, இந்த வருடம் முதல் இந்தியக் கலைஞர்களை ஊக்குவிக்கும் திட்டத்தை ஏ.ஆர். ரஹ்மானின் உதவியுடன் அமல்படுத்தவுள்ளது. 

Tags : AR rahman BAFTA
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT