செய்திகள்

சிவசேனை கட்சியில் இணைகிறார் பிரபல நடிகை ஊர்மிளா

30th Nov 2020 05:03 PM

ADVERTISEMENT

 

பிரபல நடிகை ஊர்மிளா, சிவசேனை கட்சியில் நாளை இணையவுள்ளார்.

1989-ல் சாணக்கியன் என்கிற மலையாளப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் ஊர்மிளா. 1991-ல் நரசிம்மா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். 1995-ல் வெளியான ரங்கீலா படம் அவரை இந்திய அளவில் பிரபலமாக்கியது. கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கிய இந்தியன் படத்திலும் நடித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஊர்மிளா, கடந்த வருடம் மக்களவைத் தேர்தலில் வடக்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பிறகு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். 

ADVERTISEMENT

இந்நிலையில் மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே முன்னிலை சிவசேனையில் கட்சியில் நாளை இணையவுள்ளார் ஊர்மிளா. ஆளுநர் ஒதுக்கீட்டில் ஊர்மிளா உள்ளிட்ட 12 பேரை மஹாராஷ்டிர சட்ட மேலவை உறுப்பினர்களாக நியமிக்க சிவசேனை கட்சி பரிந்துரைத்துள்ளது. 
 

Tags : shiv sena Urmila Matondkar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT