செய்திகள்

கைவிடப்பட்டதா நடிகர் சூர்யாவின் ‘வாடிவாசல்’? தயாரிப்பாளர் தாணு விளக்கம்

29th Nov 2020 05:52 PM

ADVERTISEMENT

 

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ள ‘வாடிவாசல்’ திரைப்படம் குறித்து எழுந்துள்ள வதந்திகளுக்கு தயாரிப்பாளர் கலைப்புலி தாணு விளக்கமளிததுள்ளர்.

மறைந்த எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ நாவலைத் தழுவி, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'வாடிவாசல்' படத்தில் நடிக்க சூர்யா ஒப்பந்தம செய்யப்பட்டுள்ளார். இந்தப்படதினை கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.  

‘வாடிவாசல்' தொடங்கும் முன்பு, சூரி நடிப்பில் ஒரு படம் மற்றும் தனுஷ் நடிக்கவுள்ள படம் ஆகியவற்றை முடிக்க இயக்குநர் வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில் தாணுவின் தயாரிப்பு நிறுவனமான வி கிரியேஷன்ஸ் பெயரில் போலி ட்விட்டர் கணக்குத் தொடங்கி, படம் கைவிடப்பட்டது என்று சமூக வலைதலங்களில் தவறான தகவலைப் பரப்பினார்கள்.

தற்போது ‘வாடிவாசல்’ திரைப்படம் குறித்து எழுந்துள்ள வதந்திகளுக்கு தயாரிப்பாளர் கலைப்புலி தாணு விளக்கமளிததுள்ளர். குறிப்பிட்ட போலி ட்விட்டர் கணக்கினை டேக் செய்து, தயாரிப்பாளர் தாணு தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"இந்த ட்விட்டர் அக்கவுண்ட் என்னுடையது அல்ல. என் பெயரை உபயோகித்து தவறான செய்தி பரப்புகிறார்கள். 'வாடிவாசல்' பற்றி வந்த செய்தி முற்றிலும் பொய். இதை யாரும் நம்ப வேண்டாம். எண்ணியது எண்ணியபடி, சொல்லியது சொல்லியபடி, வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் “வாடிவாசல்" வலம் வரும். வாகை சூடும்".

இவ்வாறு தாணு பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT